சூரியன் - ஆத்மகாரகன் ; தந்தைகாரகன்
சந்திரன் - மாத்ருகாரகன்
செவ்வாய் - சகோதரகாரகன்
குரு - புத்திரகாரகன்
சுக்கிரன் - களத்திரகாரகன்
புதன் - மாமன்காரகன் ;கல்விகாரகன்
சனி - ஆயுள்காரகன்
ராகு , கேது - காரகத்துவம் கிடையாது .
ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர , திரிகோண ஸ்தானங்களில் சுப பலத்துடன் இருந்தாலோ அந்த கிரகத்தின் காரகத்துவ பலன்களை நல்ல வலிமையுடன் செயல் படுத்தும் . உதாரணமாக
- செவ்வாய் இது போன்று இருந்தால் சகோதரனுக்கு நன்மை செய்யும் .
- சூரியன் இது போன்று இருந்தால் தந்தைக்கு நன்மை செய்யும் .
இதற்கு மாறாக ஒரு கிரகம் நீசம் பெற்றோ அல்லது அசுப பலன் பெற்று இருந்தால் நன்மைக்கு பதிலாக தீமையே செய்யும் .