Friday, July 18, 2008

சனி பெயர்ச்சியும் அஷ்ட வர்க்க பரல்களும்

அஷ்ட வர்க்க பரல்கள் கணித்து பார்ப்பதிலே ஒரு நன்மை உண்டு. பொதுவாக சந்திரா லக்கினத்திற்கு 3,6,11 ஆகிய வீடுகளில் சனி உலவும்போது நன்மைகள் செய்வர். அதே நேரத்தில் ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் கூடுதலான பரல்களை இந்த இடங்கள் பெற்று இருந்தால் மிகவும் விசேஷமான நன்மைகள் செய்யும். அதே போல் தீமைகள் உண்டாக்கும் ஏழரை சனி அஷ்டம சனி காலங்களில் அந்த இடங்கள் பரல்கள் அதிகம் பெற்றால் அதிக தீமைகளை செய்யாது.

Thursday, July 17, 2008

அஷ்டவர்க்கம்

ஒரு வீட்டின் தனிப்பட்ட பரல் சராசரியாக 28 இருக்கவேண்டும். 30 க்கு மேல் இருந்தால் அந்த வீட்டின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 28 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .


ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பரல் சராசரியாக 4 இருக்கவேண்டும். 8 க்கு மேல் இருந்தால் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 4 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .

Wednesday, July 16, 2008

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

  • சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் கண்டிப்பாக பலம் பெற்று இருக்கவேண்டும்.
  • பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் அல்லது தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது பஞ்ச மகா புருஷ யோகம் அல்லது நரேந்திர ராஜ யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.
  • செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
  • 1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
  • மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.
  • 6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.

Tuesday, July 15, 2008

பரல்கள்.....

பரல்கள் என்றால் நம் ஜாதகத்தின் கட்டத்தில் அமைத்து உள்ள ஒவ்வொரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமையும் மற்றும் ஜாதகத்தின் 1 ஆம் வீடு முதல் 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு வீடும் பெற்றுள்ள வலிமை பார்க்கும் ஒரு முறை தன் பரல்கள் .இதை அஷ்டவர்க்க அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

Monday, July 14, 2008

புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

குரு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.

புத்திரஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .

Friday, July 11, 2008

ராகு மற்றும் கேது திசை பலன்கள்

ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை அளிப்பார்.

கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான அமைப்பை தருவார்.

Wednesday, July 9, 2008

ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .

Tuesday, July 8, 2008

நரேந்திர ராஜயோகம் .....

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும் .

Monday, July 7, 2008

சுபக்கிரகம் ...

குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.

Sunday, July 6, 2008

வணக்கம் வாசகர்களே...

வணக்கம் வாசகர்களே

கடந்த ஐந்து நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
விஜயபானு ரகுபதி.