Wednesday, November 9, 2011

Sani Peyarchi Palangal 2011: சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி திருகனித பஞ்சங்கப்படி 15/11/2011 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சங்கப்படி பார்த்தோமென்றால் 21/12/2011 அன்று நடைபெறுகிறது. துலா ராசியில் சென்று உச்சம் அடைந்து சித்திரை , சுவாதி மற்றும் விசாக நட்சத்திர சாரங்களில் இரண்டரை ஆண்டு காலம் உலா வர போகிறார். ஒவ்வொரு ராசிகரர்களுக்கும் அவர் என்ன பலன்களை தரபோகிறார் என்பதை இங்கே சுருக்கமாக எழுதி உள்ளேன்.படித்து பயன் பெறவும்.

மேஷ ராசி : செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும் .வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்வோர்கள், ஆடை அலங்கார தொழில் செய்வோர்கள் மற்றும் வாகனத்தை வைத்து தொழில் செய்வோர்கள் சிறந்த முறையில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டு தொழில் புரிவோர் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்கள் கணவரிடம் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. திருமண முயற்சிகள் தாமதப்பட்டு பிறகு நடக்கும்.

ரிஷப ராசி : தொழில் செய்பவர்கள் கடன் கிடைகிறது என்று வாங்கி போட்டு அகலக்கால் வைக்க முயற்சி செய்யாமல் இருப்பது நன்மை தரும். தந்தை வழியில் மருத்துவ பிரச்சனைகள் , பூர்விக சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. பணியில் உள்ளவர்களுக்கு மிக சிறப்பான காலம் இது. உத்தியோக உயர்வுகள், புதிய பொறுப்புகள் தானாக ஏற்படும். பெண்களுக்கு மருத்துவ செலவுகள் , சிறு சிகிச்சைகள், குழந்தை பிறப்புக்காக மருத்துவமனையில் அனுமதிகபடுவது போன்ற நிலை ஏற்படலாம்.

மிதுன ராசி : தந்தை வழியில் சொத்துகள் சேரும். ஆனால் போராடித்தான் அதை அடைய முடியும். குழந்தை பிறப்புகள் குடும்பத்தில் உண்டு. மிக கவனமுடன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. வீடு , நிலம் வாங்குவடர்க்கு பலமான யோகம் இருக்கிறது. வருங்காலத்திற்கான முதலீடுகளை செய்து கொள்ள சூழ்நிலைகள் ஏதுவாக அமையும்.

கடக ராசி : மனைவி வழியில் சொத்துகள் சேரும். தாயார் உடல்நிலை பாதிக்கப்படும். தன்னுடைய வண்டி வாகனங்கள் அடிகடி ரிப்பேர் ஆகி செலவுகள் வைக்கும். சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் ஏற்பட்டு விலகும். மாமனார் வீட்டில் மதிகபடுவீர்கள்.

சிம்ம ராசி : தைரியம் அதிகரிக்கும். ஏழரை சனியில் இருந்து ஒரு வழியாக விடுபடும் வைப்பு ஏற்படுகிறது. சுதந்திரமான காற்றை சுவாசிக்கலாம் இனி. வாழ்கை,உறவினர்கள், நண்பர்கள் கற்று தந்த பாடங்களை வைத்து இனி முன்னேற்ற பாதையில் நடை போடலாம். இழந்த சொத்துகள், உறவுகள், பதவிகள் திரும்ப கிடைக்க பெறுவீர்கள். கலை துறையினருக்கு இனி புகழ் தேடி வரும் காலம் ஆகும்.

கன்னி ராசி : நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் . இது வரை உங்களை விரட்டி வந்த பனி சுமைகள் , நிம்மதி அற்ற சூழ்நிலைகள், மண்டையை குடைந்து கொண்டு இருந்த பிரச்சனிகள் அகன்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வருமானம் உயர்வதற்கான வாய்புகள் படி படி யாக ஏற்படும்.

துல ராசி : சொந்த வீடு வாங்கும் நேரம் இது. பிள்ளைகளால் வருமானம் உயரும். சமுகத்தில் நல்ல மதிப்பு மரியாதையை ஏற்படும். சுய தொழில் கை நிறைய orde கிடைத்து செய்வதற்க்கே திணறுகின்ற சூழ்நிலை ஏற்படும். பணிபுரிவோருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடக்கும்.

விருசிக ராசி : செலவுகள் வரிசை கட்டி காத்திருக்கும் நேரம் இது. முடிந்த வரை சுப செலவுகளாக மாற்றி கொள்ள முயற்சி செய்யவும்.தீடிர் என்று ஏற்படும் பற்றகுறைகளை சமாளிக்க நகைகள் வைத்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க வேண்டி இருந்தால் வங்கி நல்ல செலவுகளாக மாற்றி கொள்ளுங்கள். அலைச்சல்கள் அதிகரித்து சோர்வு அடைவீர்கள். சிறு உபதைகளைகளையும் உடனடிக மருத்துவரிடம் சென்று காட்டி சரி செய்துகொள்ளவும்.

தனுசு ராசி: தங்க நகைகள், பங்கு பத்திரங்கள் என சேமிப்புகள் உயரும் நேரம்.இடம் பூமி வாங்கும் அளவுக்கு சேமிப்புகள் ஏற்படாவிட்டாலும் முறையான வழக்கமான சேமிப்புகள் ஏற்படும். சுய தொழில் புரிவோருக்கு கடுமையாக உழைத்து தொழில் உயர்வடைய வாய்புகள் தேடி வரும். பணி புரிவோர் உயர் அதிகாரிகளின் கோப பார்வைக்கும் கண்டிப்புக்கும் ஆளாகி பணி மீதே வெறுபடையும் சூழ்நிலை உருவாகும்.

மகர ராசி : தொழில் புரிவோருக்கு உன்னதமான நேரம்.உழைப்பின் பலன்கள் பல மடங்காக அனுபவிக்கும் நேரம். பண வரவுகள் தாரளமாக ஏற்பட்டு தொழிலுக்கு தேவையான மூலபொருட்கள் , உபகரணங்கள் வாங்குவீர்கள். பணி புரிவோருக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.மதிப்பு மரியாதைகள் சமுகத்தில் பன்மடங்கக உயரும் .

கும்ப ராசி : தொழில் சிறப்பாக இருக்கும்.தொழிலுக்கு தேவையான இட வசதி, பண வசதி தாரளமாக கிடைக்கும். சமுகத்தில் நற்பெயரக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட களங்கங்கள் விலகும்.பெண் வழி பிரச்சனைகள் வராமல் இருக்க மிகவும் கவனத்துடன் இருக்கவும். பணி புரிவோருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்படும்.

மீனா ராசி : 12 ராசி காரர்களில் மிகவும் எச்சரிக்கையுடன் அடுத்த இரண்டரை வருடங்களை கடத்த வேண்டியவர்கள் நீங்கள்தான். இரவு நேர நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.வாகனகளில் செல்லும்போது மிதமான வேகத்தை கடை பிடிக்கவும். பணி மாற்றம் ஊர் மாற்றம் போன்றவி ஏற்பட்டு மனதிற்க்கு பிடிக்காத சூழ்நிலைகள் ஏற்படும். சம்பள உயர்வை தற்போது எதிர்பார்க்க வேண்டாம்.

Sunday, November 6, 2011

Lagnadhipathi in 12th house

லக்னாதிபதி ஒருவருடைய ஜாதகத்தில் பனிரெண்டாம் வீட்டில் அமைய பெற்றால் அவர் வாழ்கையில் அலைச்சல்கள் நிறைய இருக்கும் .வீண் விரயங்கள் அடிக்கடி அவர் வாழ்கையில் ஏற்படும். பனிரெண்டாம் வீட்டில் அமையபெற்ற லஞதிபதியுடன் சுக்கிரன் அல்லது ராகு இணைந்தால் பெண் வழி தொடர்புகள் ஏற்பட்டு பல இன்னல்களை அனுபவிப்பர். தீய கிரகங்களின் பார்வை ஏற்பட்டால் சிலருக்கு சிறை தண்டனை ஏற்பட வாய்புகள் உண்டு.

Lagnadhipathi in 4th house

லக்னாதிபதி நான்காம் வீட்டில் அமையபெற்றால் நல்ல கல்வி, அன்பு செலுத்தும் தாயார், நல்ல வாகனங்கள் மற்றும் குடியிருக்க நல்ல வீடு அமையும். சுக ஸ்தானமாகிய நான்காம் வீடு லஞதிபதியால் வலுவடைவதால் சுகமான வாழ்கை அமைய தடை இருக்காது. லக்னாதிபதி சுக்கிரனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி அனுபவிபவராக இருப்பார். லக்னாதிபதி குருவாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல கல்விமானாகவும் ஒழுக்க சீலராகவும் இருப்பார். லக்னாதிபதி செவ்வாய் அக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல விளையாட்டு வீரராக திகழ்வார். லக்னாதிபதி புதனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் புத்திசாலிதனத்தால் எதையும் சாதிபவராக திகழ்வார்.

Lagnadhipathi : லக்னாதிபதி

லக்னாதிபதி என்பது ஜாதக கட்டத்தில் முதலாம் வீடு அதிபதியை குறிக்கும் .ஒருவர் சமுகம் மற்றும் உறவினர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால், லக்னாதிபதி நல்ல இடங்களில் இருக்க வேண்டும். நல்ல இடங்கள் என்பது லக்னத்தில் இருப்பது , ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருபதாகவும். இரண்டு மற்றும் பத்தாம் வீடுகளில் கூட இருக்கலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நீச்ச வீடுகளில் அல்லது மறைவு ஸ்தனங்கள் ஆகிய மூன்றாம் வீடு, ஆறாம் வீடு , எட்டாம் வீடு, மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருக்க கூடாது. இவர்கள் சமுகத்தில் நல்ல மதிப்பை பெறுவது மிகவும் கடினம்.

Saturday, November 5, 2011

Lagna in Tamil : லக்னமும் முக அழகும்

ஜாதக அமைப்புகளில் 12 வகையான லக்னங்கள் உள்ளன. ஒருவரது லக்னாதிபதி மற்றும் அவரது லக்கினதோடு சம்பந்தம் பெறுகிற கிரங்களை பொறுத்தே ஒருவரது முக அழகு அமைகிறது.

 • லக்கினதுடன் சுக்கிரன் சம்பந்தம் பட்டு இருந்தால் அவர் நல்ல வெள்ளை நிறமாகஇருப்பர். கவர்ச்சி பொருந்திய முக அமைப்பை பெற்று இருப்பர்.
 • லக்கினதுடன் சனி சம்பந்தம் பட்டு இருந்தால் கருப்பு நிறம் உடையவராக இருப்பார். சனி சுக்கிரன் ஆகிய இரண்டுமே சம்பந்தம் பெற்று இருந்தால் கருப்பாக இருந்தாலும் களை ஆக இருப்பார்கள்
 • லக்கினதுடன் புதன் சம்பந்த பட்டு இருந்தால் அறிவு களை உடைய முகமாக இருக்கும்
 • லக்கினதுடன் சூரியன் சம்பந்தம் பட்டு இருந்தால் தேஜஸ் மற்றும் ஆளுமை நிறைந்த கம்பீரமான முக தோற்றத்துடன் விளனகுவர்கள்
 • லக்கினதுடன் சந்திரன் சம்பந்தம் பட்டு இருந்தால் குளிர்ச்சியான முகம் அமைய பெற்று இருப்பார்கள். வசீகர உடையவர்கள்
 • லக்கினதுடன் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் பணிவான முகம் உடைய ஆண்களாகவும் மாசு மறுவற்ற குடும்ப பாங்கான அழகு உடைய பெண்களக திகழ்வார்கள்
 • லக்கினதுடன் செவ்வாய் சம்பந்தம் பட்டு இருந்தால் நல்ல சிவப்பான நிறம் உடைய்வர்கலகவும் கண்டிப்பு நிறைந்த பார்வை உடையவர்களாகவும் இருப்பார்கள்
 • லக்கினதுடன் ராகு சம்பந்தம் பட்டு இருந்தால் ஒழுங்கற்ற பல்வரிசை அல்லது பெரிய மூக்கு என்று ஏதேனும் குறையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்
 • லக்கினதுடன் கேது சம்பந்தம் பெற்று இருந்தால் ஒரு துறவி போன்ற எளிமையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்

சுக்கிரன் உச்சம்

சுக்கிரன் மீனா ராசியில் உச்சம் அடைகிறது. சுக்கிரன் உச்சம் அடைந்து அவரது தசையும் ஒருவருக்கு நடந்தால் அவர் அனுபவிக்கும் சுக போகம்களுக்கு எல்லையே கிடையது. விலை உயர்ந்த வாகனம்கள் , துணிமணிகள், ஆபரணங்கள், நல்ல சுவை மிகுந்த உணவை ஆடம்பர ஹோடேல்களில் உண்டு மகிழும் அமைப்பு என்று நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். சினிமா நடிகைகளுக்கு இந்த அமைப்பு இருந்தால் ஒளி வீசும் ரம்பை அக திகழ்வார்.

What is Naga Dosham? நாக தோஷம் என்றால் என்ன

நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராஹு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும் .நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடதல்ம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்

செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.

 • செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்
 • கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை
 • சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
 • செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில் எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.

Friday, November 4, 2011

குரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு

குரு கிரகம் கடக ராசியில் உச்சம் அடைகிறது. குரு லக்னாதிபதி ஆகவோ அல்லது 2,5,9,11 அதிபதி ஆகவோ இருந்து உச்சம் அடைந்தால் அவர்கள் நீதி நேர்மை விரும்புகிற புன்னியவன்களாக இருப்பார்கள்கள்.இவர்கள் கையில் எப்போதும் பணம் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சொற்படி கேட்டு நடக்கும் புத்திரர்கள் அமைவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களாக திகழ்வார்கள். நல்ல நண்பர்களை பெற்று இருப்பார்கள். பிறருக்கு நல்ல உபதேசம் செய்வார்கள். ஆன்மீக நட்டம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வி கற்று எந்த விதமான கேட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்களாக திகழ்வார்கள்.

சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு

சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தி சனி உச்சம் அடைந்து இருந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப களத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். சமுக சேவையில் நட்டம் கொண்டு போடு நல வழகுகளை போட்டு நீதியை நிலை நாட்டுவார்கள். நன்கு படித்து வழகாடுபவர்கலகவும் நீதிபதிகளவும் பெயர் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் செயல் ஆற்றுவார்கள் .

குரு தோஷ பரிகாரம்

உங்களடுடைய ஜாதகத்தில் குரு கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இரண்டு பரிஹார ஸ்தலங்களுக்கு சென்றால் அது நீங்கி விடும். குரு கிரகத்துக்கு என தனியாக உள்ள கோவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருசெந்தூர் முருகன் கோவில் ஒரு விசேஷமான குரு பரிஹார ஸ்தலம் ஆகும்.நீங்கள் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள யானைக்கு கரும்பு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அது மிக வலிமையான பரிஹாரம் ஆகும் .