Saturday, May 31, 2008

எதிர்பாராத செல்வம் ...

9 க்குடையவர் ஆட்சி வீட்டிலும் , 4 இல் சுக்கிரனும் இருந்தால் ......சுபகிரகங்கள் கூடி 9 இல் இருந்தாலும் 9 க்குடையவர் தசா புத்திகளில் மிகுந்த எதிர்பாராத செல்வம் கிடைக்கும் .

சுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....

லக்னாதிபதி அதிக பலம் பெற்று 1 , 4 , 7 , 10 இல் இருந்து சுபகிரகங்கள் பார்வை பெற்றால் தானாக தனாதிபதியாவான் .

Friday, May 30, 2008

வாசகர்களே

வணக்கம் வாசகர்களே

கடந்த மூன்று நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
விஜயபானு ரகுபதி

Tuesday, May 27, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு......

ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

ஹம்ச யோகம் - குரு பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது .

Monday, May 26, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

நீச்சபங்க ராஜயோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் நீச்சமடைந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நீச்ச தன்மை பங்கம் பெற்று "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.................நீச்ச பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.....................மேலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் பெற்றிருக்கிறதோ , அந்த வீட்டிற்கு அதிபதி லக்னதிற்கு கேந்திரம் பெற்று அமைந்தாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

லக்ஷ்மி யோகம் - 9 ஆம் வீட்டிற்கு அதிபதி 10 இல் ஆட்சி பெற்றாலும் லக்னதிற்கு 4, 5, 7, 9, 10 இல் அமையபெற்றலும் லக்ஷ்மி யோகமாகும்.

கிரகமாலிகா யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு முன்போ அல்லது பின்போ தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் கிரகமாலிகா யோகமாகும்.

Sunday, May 25, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி...

குரு சந்திர யோகம் - சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.

சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.

அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.
சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.

துஷ் யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.

அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.

சுபாவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.

சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம் அமைந்தால் சுபவேசி யோகமாகும்.