Sunday, May 25, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி...

குரு சந்திர யோகம் - சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.

சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.

அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.
சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.

துஷ் யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.

அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.

சுபாவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.

சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம் அமைந்தால் சுபவேசி யோகமாகும்.

Saturday, May 24, 2008

ராஜயோகங்கள்.......

1. தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம்.

2. பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம்.

3. கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால் கஜகேசரி யோகம்.

Friday, May 23, 2008

வெளிநாடு செல்லும் வாய்ப்பு.........

ஜல ராசிகள் - கடகம் , விருச்சிகம் , மீனம்.

ஜல கிரகங்கள் - குரு , சந்திரன் , சுக்கிரன்.

ஜல ராசியில் ஜல கிரகங்கள் இருந்தாலும் , அந்த கிரகத்தின் தசையில் வெளிநாடு செல்வார்கள் .....மேலும் ராகு ஜல ராசியில் இருந்தாலும் வெளிநாடு செல்வார்கள் ......குரு ஜலராசிகளையும் ஜலராசிக்கு ஆதிபத்யமுள்ள கிரகங்களை பார்த்தாலும் அந்த ஜாதகர் கடல் கடந்து பிரயாணம் செய்யக் கூடிய யோகமுண்டு...ஜலராசிகளை லக்னமாக கொண்டவர்களும் வெளிநாடு செல்லும் யோகமுண்டு.

Thursday, May 22, 2008

சம்பாதிக்கும் திறன் உடையவர் ...

ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11-இல் சூரியன் இருந்தால் ஜீவன யோகம் பெற்று சர்வ சாதரணமாக பணம் சம்பாதிக்கும் திறனை உடையவராக திகழ்வார் .

Wednesday, May 21, 2008

புத்திர தோஷம் அடிபடும் நிலை ....

லக்னாதிபதி 5 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ , 10 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைத்தாலும் .......10 க்குடையவர் லக்கினம் மற்றும் லக்னாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் .......கர்மகாரரான செவ்வாய் லக்னத்துடன் , 10 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் ......புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .

Tuesday, May 20, 2008

தந்தை வழியில் திருமணம் ....

ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சூரியன் , ராகு , குரு , சுக்கிரன் ஆகியோர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் தந்தை வழி உறவில் திருமணம் நடக்கும்.

Monday, May 19, 2008

திருமணம் ...தனது ஜாதியிலா?...வேறு ஜாதியிலா?


வேறு
ஜாதியில் திருமணம்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு , கேது , மாந்தி ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அவருக்கு வேறு ஜாதியில் திருமணம் நடக்கும்.

தனது ஜாதியில் திருமணம் .

குரு , புதன் , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அல்லது அவர்கள் சாரம் பெற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் தனது ஜாதியில் திருமணம் நடக்கும்.