- லக்கினதுடன் சுக்கிரன் சம்பந்தம் பட்டு இருந்தால் அவர் நல்ல வெள்ளை நிறமாகஇருப்பர். கவர்ச்சி பொருந்திய முக அமைப்பை பெற்று இருப்பர்.
- லக்கினதுடன் சனி சம்பந்தம் பட்டு இருந்தால் கருப்பு நிறம் உடையவராக இருப்பார். சனி சுக்கிரன் ஆகிய இரண்டுமே சம்பந்தம் பெற்று இருந்தால் கருப்பாக இருந்தாலும் களை ஆக இருப்பார்கள்
- லக்கினதுடன் புதன் சம்பந்த பட்டு இருந்தால் அறிவு களை உடைய முகமாக இருக்கும்
- லக்கினதுடன் சூரியன் சம்பந்தம் பட்டு இருந்தால் தேஜஸ் மற்றும் ஆளுமை நிறைந்த கம்பீரமான முக தோற்றத்துடன் விளனகுவர்கள்
- லக்கினதுடன் சந்திரன் சம்பந்தம் பட்டு இருந்தால் குளிர்ச்சியான முகம் அமைய பெற்று இருப்பார்கள். வசீகர உடையவர்கள்
- லக்கினதுடன் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் பணிவான முகம் உடைய ஆண்களாகவும் மாசு மறுவற்ற குடும்ப பாங்கான அழகு உடைய பெண்களக திகழ்வார்கள்
- லக்கினதுடன் செவ்வாய் சம்பந்தம் பட்டு இருந்தால் நல்ல சிவப்பான நிறம் உடைய்வர்கலகவும் கண்டிப்பு நிறைந்த பார்வை உடையவர்களாகவும் இருப்பார்கள்
- லக்கினதுடன் ராகு சம்பந்தம் பட்டு இருந்தால் ஒழுங்கற்ற பல்வரிசை அல்லது பெரிய மூக்கு என்று ஏதேனும் குறையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்
- லக்கினதுடன் கேது சம்பந்தம் பெற்று இருந்தால் ஒரு துறவி போன்ற எளிமையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்
Saturday, November 5, 2011
Lagna in Tamil : லக்னமும் முக அழகும்
ஜாதக அமைப்புகளில் 12 வகையான லக்னங்கள் உள்ளன. ஒருவரது லக்னாதிபதி மற்றும் அவரது லக்கினதோடு சம்பந்தம் பெறுகிற கிரங்களை பொறுத்தே ஒருவரது முக அழகு அமைகிறது.
சுக்கிரன் உச்சம்
சுக்கிரன் மீனா ராசியில் உச்சம் அடைகிறது. சுக்கிரன் உச்சம் அடைந்து அவரது தசையும் ஒருவருக்கு நடந்தால் அவர் அனுபவிக்கும் சுக போகம்களுக்கு எல்லையே கிடையது. விலை உயர்ந்த வாகனம்கள் , துணிமணிகள், ஆபரணங்கள், நல்ல சுவை மிகுந்த உணவை ஆடம்பர ஹோடேல்களில் உண்டு மகிழும் அமைப்பு என்று நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். சினிமா நடிகைகளுக்கு இந்த அமைப்பு இருந்தால் ஒளி வீசும் ரம்பை அக திகழ்வார்.
What is Naga Dosham? நாக தோஷம் என்றால் என்ன
நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராஹு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும் .நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடதல்ம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்
Labels:
naga dosham remedies
செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்
செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.
- செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்
- கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை
- சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
- செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில் எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.
Friday, November 4, 2011
குரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
குரு கிரகம் கடக ராசியில் உச்சம் அடைகிறது. குரு லக்னாதிபதி ஆகவோ அல்லது 2,5,9,11 அதிபதி ஆகவோ இருந்து உச்சம் அடைந்தால் அவர்கள் நீதி நேர்மை விரும்புகிற புன்னியவன்களாக இருப்பார்கள்கள்.இவர்கள் கையில் எப்போதும் பணம் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சொற்படி கேட்டு நடக்கும் புத்திரர்கள் அமைவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களாக திகழ்வார்கள். நல்ல நண்பர்களை பெற்று இருப்பார்கள். பிறருக்கு நல்ல உபதேசம் செய்வார்கள். ஆன்மீக நட்டம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வி கற்று எந்த விதமான கேட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்களாக திகழ்வார்கள்.
சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தி சனி உச்சம் அடைந்து இருந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப களத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். சமுக சேவையில் நட்டம் கொண்டு போடு நல வழகுகளை போட்டு நீதியை நிலை நாட்டுவார்கள். நன்கு படித்து வழகாடுபவர்கலகவும் நீதிபதிகளவும் பெயர் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் செயல் ஆற்றுவார்கள் .
குரு தோஷ பரிகாரம்
உங்களடுடைய ஜாதகத்தில் குரு கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இரண்டு பரிஹார ஸ்தலங்களுக்கு சென்றால் அது நீங்கி விடும். குரு கிரகத்துக்கு என தனியாக உள்ள கோவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருசெந்தூர் முருகன் கோவில் ஒரு விசேஷமான குரு பரிஹார ஸ்தலம் ஆகும்.நீங்கள் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள யானைக்கு கரும்பு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அது மிக வலிமையான பரிஹாரம் ஆகும் .
Subscribe to:
Posts (Atom)