Saturday, November 5, 2011
What is Naga Dosham? நாக தோஷம் என்றால் என்ன
நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராஹு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும் .நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடதல்ம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்
Labels:
naga dosham remedies
செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்
செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.
- செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்
- கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை
- சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
- செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில் எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.
Friday, November 4, 2011
குரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
குரு கிரகம் கடக ராசியில் உச்சம் அடைகிறது. குரு லக்னாதிபதி ஆகவோ அல்லது 2,5,9,11 அதிபதி ஆகவோ இருந்து உச்சம் அடைந்தால் அவர்கள் நீதி நேர்மை விரும்புகிற புன்னியவன்களாக இருப்பார்கள்கள்.இவர்கள் கையில் எப்போதும் பணம் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சொற்படி கேட்டு நடக்கும் புத்திரர்கள் அமைவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களாக திகழ்வார்கள். நல்ல நண்பர்களை பெற்று இருப்பார்கள். பிறருக்கு நல்ல உபதேசம் செய்வார்கள். ஆன்மீக நட்டம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வி கற்று எந்த விதமான கேட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்களாக திகழ்வார்கள்.
சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு
சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தி சனி உச்சம் அடைந்து இருந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப களத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். சமுக சேவையில் நட்டம் கொண்டு போடு நல வழகுகளை போட்டு நீதியை நிலை நாட்டுவார்கள். நன்கு படித்து வழகாடுபவர்கலகவும் நீதிபதிகளவும் பெயர் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் செயல் ஆற்றுவார்கள் .
குரு தோஷ பரிகாரம்
உங்களடுடைய ஜாதகத்தில் குரு கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இரண்டு பரிஹார ஸ்தலங்களுக்கு சென்றால் அது நீங்கி விடும். குரு கிரகத்துக்கு என தனியாக உள்ள கோவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருசெந்தூர் முருகன் கோவில் ஒரு விசேஷமான குரு பரிஹார ஸ்தலம் ஆகும்.நீங்கள் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள யானைக்கு கரும்பு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அது மிக வலிமையான பரிஹாரம் ஆகும் .
Sunday, January 25, 2009
குரு கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்
தனுசு ராசிக்கும் , மீனா ராசிக்கும் அதிபதியான குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார். மகரத்தில் நீச்சம் அடைகிறார்.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் குருவிற்கு நட்பு கிரகங்கள். புதன் மற்றும் சுக்கிரன் பகை கிரகங்களாகும் . சனி சம கிரகம் ஆவார்.
புனர்பூசம் , விசாகம் மற்றும் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.
குரு தசை 16 வருட காலம் ஒருவருக்கு நடக்கும் .மேஷம்,மிதனம் ,கடகம் மற்றும் மீன லக்னத்திற்கு மிகுந்த யோகத்தை செய்யும்.
குரு ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல அமைப்பில் அமைந்து இருந்து இளமை காலத்தில் வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் அடைவார்கள். பிற்கால வயதில் சந்ததிகள் சிறப்புடன் விளங்குவார்கள்.

Friday, January 9, 2009
சனி கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்
மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதியான சனி துலாத்தில் உச்சம் பெறுகிறார். மேசத்தில் நீச்சம் அடைகிறார்.
புதன் , சுக்கிரன் , ராகு மற்று கேது ஆகிய கிரகங்கள் சனிக்கு நட்பு கிரகங்கள். சூரியன் ,செவ்வாய் மற்றும் சந்திரன் பகை கிரகங்களாகும் . குரு சமமான கிரகம் ஆவார்.
பூசம் , அனுசம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனியின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.
சனி தசை 19 வருட காலம் ஒருவருக்கு நடக்கும் .துலா மற்றும் ரிஷப லக்னத்திற்கு மிகுந்த யோகத்தை செய்யும்.
சனி ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல அமைப்பில் அமைந்து இருந்தால் தன்னுடைய தசா புக்தி காலங்களில் இமாலய உச்சி என்று சொல்ல கூடிய அளவிற்கு உயர்த்துவர். சனி சரியாக அமையவில்லை என்றால் அதல பாதாளத்தில் தள்ளி அழ விடுவர்.

Subscribe to:
Posts (Atom)